திட்டங்கள்
சிங்கப்பூரின் 50-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு, 1965 முதல் 2015 வரையில் பதிப்பிக்கப்பட்ட மின்வடிவமாக்கப்பட்ட சுமார் 350 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பைத் தேசிய நூலக வாரியத்தின் BookSG இணையத் தளத்திலும் பொதுமக்கள் காணலாம்.
வானொலித் தொகுப்பு
உரைகள்
ஒலி 96.8FM நேரலை நிகழ்ச்சியில் நமது உறுப்பினர்கள் முனைவர் இளவழகன் முருகனும், ஜெயசுதா சமுத்திரனும் கலந்து கொண்டனர். சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் குறிக்கோள்கள், முயற்சிகள் மற்றும் எதிர்வரும் திட்டங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இவர்களுடன் சுஷ்மா சோமா நம் அமைப்போடு இணைந்து படைத்த “நாளும் ஒரு கீதம்” எனும் அண்மைய இசைத்தொடரைப் பற்றிப் பேசினார்.
இந்தச் சின்னம் எட்டுப் பெரிய, சிறிய அம்புகளாலும் மூன்று அடிப்படை வண்ணங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்திசை என்னும் சொல் எல்லாத் திக்குகளையும் குறிக்கும். தமிழ்ப் பண்பாடு என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த பெரிதும் சிறிதுமான தாக்கங்களால் உருவானதே. அதேபோன்று எல்லாத் திசைகளிலும் அதன் ஊடுருவலையும் காணலாம். எட்டு அம்புகளையும் இடைவெளிகளோடு சித்திரித்திருப்பதற்குக் காரணம், தமிழ்ப் பண்பாடு தனது எல்லைகளை முற்றிலும் மூடிக்கொண்டு உறைந்து போய்விட்ட கலாச்சாரமாக இல்லாமல் என்றென்றும் துடிப்போடு விளங்கும் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது என்பதுதான். சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று ஆதார நிறங்களே ஆயிரமாயிரம் வண்ணங்களுக்கு மூலம். அதேபோன்று, ஒரு பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அதன் ஒருசில விழுமியங்களே அடிப்படை.