உங்களுக்குத் தெரியுமா? (தொடர்)

இந்தப் பகுதி, தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்து பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது. முதல் தொடர், நவீன ஐரோப்பாவுடன் உள்ள தமிழர்களின் தொடர்பு குறித்த தகவல்களைத் தரும்.

"ஐரோப்பாவும் தமிழ் உலகமும்" தொடரைத் தொகுத்தவர் முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாவார்.