சிங்கப்பூர்த் தமிழ் நடன மின்தொகுப்பு
சிங்கப்பூரின் தமிழ்க் கலைகள் பற்றிய மின்தொகுப்புகளை உருவாக்கத் தேசிய நூலக வாரியமும் தமிழ் மின்மரபுடைமைக் குழுவும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் இறுதி கட்டம்தான் ‘சிங்கப்பூர்த் தமிழ் நடன மின்தொகுப்பு’ எனும் திட்டம். நடனப் பள்ளிகள், சிறு குழுக்கள், தனி நபர்கள் என்று பல்வாறாகச் செயல்படும் நாட்டியக்கலைஞர்களின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இத்தொகுப்பு அரங்கேறுகிறது. ஒலி, ஒளிப்பதிவுகள், விளம்பர ஏடுகள், கலைஞர்களின் படங்கள் போன்ற ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, விளக்கம் எழுதப்பட்டு, மின்வடிவில் உருவாகியுள்ள இத்தொகுப்பு, வரும் நவம்பர் மாதம் 2019 வெளியீடு காணும்.
சிங்கப்பூரில் தமிழ் மொழி, பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் பரப்பவும் மேற்கொண்டுவரும் பல மின்னாக்க முயற்சிகளில் இந்த ஆவணத் தொகுப்பும் அடங்கும். நடனக் கலைஞர்களுக்குப் பயிலரங்கு வளமாகவும், ஆய்வாளர்களுக்கு மேற்கோள் மூலமாகவும், ஆசிரியர்களுக்கு வகுப்பறைக் கல்விச் சாதனமாகவும், நீண்டகால வரலாற்றுப் பதிவாகவும், தேசிய இசை வளங்களுக்கு ஒரு பங்களிப்பாகவும் இந்த ஆவணத் தொகுப்பு திகழும்.
தேசிய நூலக வாரியம் வரும் ஆண்டுகளில் இந்த வளத்தைத் தொடர்ந்து பெருக்க விரும்புவதால் மேலும் பல ஆவணங்களை வரவேற்கிறது. பின்வரும் வழிகளில் ஆவணங்களை வாரியத்துக்கு நன்கொடையாக வழங்கலாம்:
-
donors@library.nlb.gov.sg அல்லது ref@library.nlb.gov.sg என்னும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
-
6332 3255 என்ற எண்ணில் வாரியத்தை அழைக்கலாம்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்: முனைவர் லாவண்யா பாலச்சந்திரன்