top of page
red.png

சிங்கப்பூர்த் தமிழ் நாடகங்கள் மின்தொகுப்பு

Drama.jpg

தமிழ் நாடகத்துறை, ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சிங்கப்பூரில் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்குப் போதிய சான்றுகள் இல்லை. தமிழ் நாடகங்கள் சிங்கப்பூரின் இன்றைய சூழலில் செழித்து வளர்ந்து வந்தாலும், இன்றுவரை சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. சி.த.நா.மி. திட்டம், இந்நாட்டில் தமிழ் நாடக வளர்ச்சியின் வரலாற்றைச் சேகரிக்கவும் குறிப்பெழுதவும் முற்படுகிறது. இத்தொகுப்பு, மின்வடிவில் எவருக்கும், எங்கேயும் இலவசமாகக் கிடைக்கும்.

 

நாடக வரைவுகள், விளம்பரங்கள், ஒலி/ஒளிப் பதிவுகள், தமிழ் நாடக விமர்சனங்கள் ஆகியவற்றைக் கூடுமானவரை தொகுக்க இந்த முன்னோடித் திட்டம் முற்படும். இத்தொகுப்பு, ஒரு வரலாற்றுப் பதிவாகவும் நாடகத்துறையில் ஈடுபடும் தற்கால, எதிர்காலத் தலைமுறையினர் கற்றுக்கொள்ள உதவும் கருவூலமாகவும் திகழும். இத்தொகுப்பில் உள்ள தமிழ் நாடகங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக விளங்குவதோடு சிங்கப்பூரின் அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சி பற்றிய குறிப்பேடுகளாகவும் திகழும்.

 

கூடுமானவரை கடந்த கால நாடகத்துறை பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். சிங்கப்பூரின் பன்மொழி நாடகச்சூழலில், தமிழ் நாடகங்கள் பற்றிய பரந்த பார்வையை உருவாக்குவதில் இத்தொகுப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

இத்தொகுப்பு 25 நவம்பர் 2017, அன்று  வெளியிடப்பட்டது. இத்தொகுப்பைக் காண தேசிய நூலக வாரியத்தின்,  கலைகளுக்கான மின் களஞ்சியம் பக்கத்தைக் காணலாம்: http://eresources.nlb.gov.sg/arts/website/Contents/DASTT.aspx

தலைமை ஒருங்கிணைப்பாளர்: திரு கணேஷ் சுப்ரமணியம்

bottom of page