top of page
red.png

உங்களுக்குத் தெரியுமா? (தொடர்)

இந்தப் பகுதி, தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்து பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது.

அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கல்கியின் 1955ஆம் ஆண்டு நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. அக்கதையின் காலம் பத்தாம் நூற்றாண்டுச் சோழர் காலம். சோழர்களின் அரசியல், கலை, கட்டடக்கலைச் சாதனைகள் தமிழர் பண்பாட்டு நினைவுகளில் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. ஆனால் புனைவுகளையும் நினைவுகளையும் வரலாறாகக் கொள்ளவியலாது. பழுவூர் இளவரசி நந்தினியும் படகோட்டும் பூங்குழலியும் முற்றிலுமாகவே கற்பனைக் கதைமாந்தர்கள். இடைக்காலச் சோழர் என்போர் எவர்? கதைகளின் வழியாகப் பரவலாகித் தற்போது திரைப்படத்தின் வழியாகத் தமிழரல்லாதோருக்கும் சென்று சேர்ந்துள்ள சோழர்களைப் பற்றி - கற்பனைகளைக் கணக்கிற்கொள்ளாத - ஒரு வரலாறு இத்தொடரில் உங்களுக்காக! (முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்)

சிங்கப்பூரின் 56வது தேசிய தினமாகிய இன்று (9 ஆகஸ்ட் 2021), இந்த இரண்டாவது தொடரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இத்தொடரில், வட இலங்கையில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்க் குடிகள் பற்றிய வரலாற்றைக் காணலாம். ஓவியங்களிலும் கட்டடக் கலைகளிலும் உறைந்திருக்கும் அந்த வரலாற்று நுணுக்கங்களை இத்தொடர் படம் பிடித்துக் காட்டுகிறது. 
முதல் தொடரைத் தொகுத்த அதே முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்தான் இதனையும் படைக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாவார்.

"ஐரோப்பாவும் தமிழ் உலகமும்" தொடரைத் தொகுத்தவர் முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாவார்.

bottom of page