மைய நிகழ்வுகள் (கடந்தவை)

திருக்குறள்: சமய நூலா? சமயசார்பற்ற நூலா?
தேதி: சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019
நேரம்: மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை
இடம்: தேசிய நூலகம் (16ஆம் தளம் - The Pod), 100 விக்டோரியா சாலை
தமிழ்ப் படைப்புகளிலேயே தலைசிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள், அகத்திலும் புறத்திலும் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பது குறித்த சீரிய சிந்தனையை வழங்குகிறது. எனினும், திருக்குறள், அடிப்படையில் சமய நூலா சமயசார்பற்ற நூலா என்பது குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி அது சமய நூலாக இருந்தால் எந்தச் சமயத்தை அது சார்ந்தது என்னும் கேள்வியும் உள்ளது. சிந்தனையைத் தூண்டும் இத்தகைய கேள்விகளுக்குப் போதுமான புறச்சான்றுகள் இல்லாத நிலையில் நூலிலேயே காணக்கூடிய அகச்சான்றுகள் மூலம்தான் விடை தேட வேண்டும்.
அந்த விடை தேடும் முயற்சியில் நமக்கு வழிகாட்ட மூன்று சிந்தனையாளர்களை அழைத்துள்ளோம்.
சிங்கப்பூரின் முன்னணித் தமிழ் அறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன்,
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு சபாரத்னம் ரத்னகுமார்,
கல்வி அமைச்சின் முதன்மைத் தமிழ் ஆசிரியர் திரு சுப்பிரமணியம் நடேசன் ஆகியோர் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர்.
ஆங்கிலத்தில் நடைபெறும் இக்கருத்துரையாடலை திரு. அருண் மகிழ்நன் வழி நடத்துவார்.

மையம் பற்றித் தமிழ் சமூகத் தலைவர்களுக்கான விளக்கக் கூட்டம்
தேதி: சனிக்கிழமை, 16 மார்ச் 2019
நேரம்: மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை
இடம்: பன்னோக்கு அறை (Multi-Purpose Hall), கீழ்த்தளம் (B1)
தேசிய நூலகம், 100 விக்டோரியா சாலை

புத்தாண்டு என்பது என்ன?
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019
நேரம்: மாலை 3 மணிமுதல் 5 மணிவரை
இடம்: The Pod, தளம் 16
தேசிய நூலகம், 100 விக்டோரியா சாலை