கருத்தரங்கம்

Sundar P : மேற்காணும் சுட்டியில் (கட்டுரையில்) தமிழ் புத்தாண்டு எப்போது என்பது பற்றிய கருத்தாக்கம் காணப்பெற்றேன். அதன் தொடர்பான எனது கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.


என்னை அறிமுகம் செய்துகொள்ள: சென்னை வாழ்விடம். பிறப்பு, கல்வி, பணி அனைத்தும் சென்னை. நாடுதாண்டிய வணிக இயந்திரங்கள்(IBM) எனும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், முகிற்கணிமை (Cloud computing) கட்டமைப்பு வடிவமைப்பாளராக (Infrastructure Architect) பணியாற்றுகிறேன். ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஜோதிடச் சக்கரத்தில் உள்ள இராசிகள் நேர்க்கோட்டில் வருவன அல்ல. சுற்றாக வருபவை. மேஷத்திற்குப் பிறகு இரஷபம் என்பதுபோல், மீனத்திற்குப் பிறகு மீண்டும் மேஷம். எதனை முதலென ஏற்பது? டிசம்பருக்குப் பிறகு ஜனவரி வந்தாலும், கிரகரி அறிவித்த தொடக்கமான ஜனவரியினை ஆங்கில நாள்காட்டிகள் முதலென ஏற்றுகொண்டன.

கதிராண்டு முறையில் கணிக்கப்படும் ஜோதிட முறையில், கதிரவன் பெயரும் நாள் ஆங்கிலத் தேதி 21. எனவே, கதிர் மேஷத்திற்கு வருவது ஏப்ரல் 14 அன்று. அவ்வகையில் புத்தாண்டு தேதி என்று எதனை கொள்வது?

பூமியும் கோள்களும், உருள் வடிவம் என்பதும், நீள்வட்டப் பாதையில் கதிரவனை சுற்றி வருவதும், அறிவியல் நிரூபனத்திற்குப் பிறகு அனைவரும் ஏற்றுக்கொண்டதாகியது. ஆண்டுத் தொடக்கம் என்பது ஜோதிடம் தவிர்த்து நமது பயன்பாட்டிற்கு எனும்போது அதனை மரபு மற்றும் வாழ்வை ஒட்டி ஏற்படுத்திக் கொள்வது தவறில்லை. சித்திரை என்பது நெடுங்காலமாக தமிழ் ஆண்டின் தொடக்கம் என்றே பழகியதால், மரபாக ஏற்க வேண்டுமா?

ஆவணி தொடக்கமும் நட்சத்திரங்களை முன்னிறுத்தியே சொல்லப் பட்டிருக்கின்றது. எனவே அதனையும் வாழ்வியலோடு ஒத்துப் போவதாக கொள்ள வேண்டியதில்லை.

ஜோதிடம், வானவியல் எல்லாமே கற்றோரும், சிந்தனையாளரும், மேற்குடியினரும் பயன்படுத்தி வந்தவை. அறுவடை பாமரனும் பங்குபெறும் வைபோகம். வேளாண்மையே வெகுமக்களின் தொழிலாகவும், ஏனைய தொழில் செய்வோருக்கும் உணவு முதன்மை என்பதாலும், அறுவடையை ஓட்டிப் புத்தாண்டு என்பது ஏற்புடையது.

சித்திரை ஆண்டுத் தொடக்கமாக தமிழகம் மட்டுமின்றி, இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகள் பலவற்றில் ஏற்க்கப்பட்டதில் வியப்பில்லை. சோழர் ஆதிக்கம் மிகுந்த நலப்பரப்பில் இப்பழக்கம் பரவி இருக்க வாய்ப்புகள் அதிகம். வடமொழி மற்றும் பிராமண வழமைகளை சோழர்கள் போற்றியே வந்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள இறைவனின் பெயரே தமிழ் பெயர் அல்லவே. சிவனே தமிழ்க் கடவுள் அல்லவே.

சீன, மற்றும் ஆப்பிரிக்க புத்தாண்டுகளும் அறுவடையை ஒட்டியே அமைந்துள்ளன. சமணப் புத்தாண்டு கார்த்திகை அடுத்து வருவதாக அறிகிறேன். அவ்வாறெனில், அது டிசம்பர் திங்களில் வரும். பௌத்தப் புத்தாண்டு பல மாற்றங்கள் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. ஹீனயானம் மற்றும் மஹாயானம் ஆகியவை ஒரே புத்தாண்டைக் கொண்டுள்ளனவா? இவற்றில் எது புத்தர் கூறிய பௌத்தம்?

கிருத்து ஆண்டு தற்போது பொது ஆண்டாக ஏற்கப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுகளுக்கும் திருவள்ளுவர் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது, சம்பிரதாயமாக மட்டும். மக்களிடையே இல்லை. திருவள்ளுவர் ஆண்டுத் தொடங்குவதும் தை திங்களிலேயே. ------------------------------------------------------------------------------------------------------------------------------
Sabaratnam Ratnakumar:

Page 14 of the article caught my attention:

மொத்தத்தில், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மட்டும் பார்க்கும் போது தமிழ்ர்களின் புத்தாண்டு இன்ன மாதத்தில்தான் துவங்குகிறது என்று அறுதியிட்டுக்கூறுவது வாதத்திற்குரியதே.


எனினும், காலவோட்டத்தில், பண்பாடுகளும் சடங்குகளும் மாற்றங்களுக்குள்ளாகி, அந்தந்தக் காலத்திற்கும் இடத்திற்கும் மக்களுக்கும் ஏற்ப அவை பரிணமித்துக் கொண்டிருப்பது கண்கூடு. சிங்கபூர்த் தமிழ்ர்களுக்கு எது புத்தாண்டு என்பதை அவர்களே ஒருமித்து முடிவு செய்யலாமே!

Singaporean Tamil community consists of Hindus, Muslims, Christians, Buddhists, and others who don’t belong to a religion. And, there is no national religion in Singapore.


i) Singaporean Tamils who are Hindus celebrate “Hindu New Year” (“Chithirai Puthaandu”);

ii) Singaporean Tamils who are Christians celebrate “Christmas-cum- New Year”;

iii) Singaporean Tamils who are Muslims celebrate “Islamic New Year” (“Hijri New Year”)

iv) Singaporean Tamils who are Buddhists celebrate Vesak;

v) Singaporean Tamils who don’t follow a religion might (by default) celebrate January 1; and

vi) Harvest festival (பொங்கல் விழா) – being a secular event – is celebrated by Singaporean Tamils in public places such as the Community Centers.

As such – in the context of Singapore's secularism – it might be unreasonable to pressurize the Government into allocating a day for “Singaporean Tamils’ New Year” that would equally satisfy all Tamils (regardless of religion).
இ.ஜே.சுந்தர்: முனைவர் இ.ஜே.சுந்தர் எழுத்தாளர், இதழாளர், தமிழப்பேராசிரியர், சமூகத்தொண்டர், நிர்வாகி முதலிய பன்முகங்களைக் கொண்டவர்.


பண்டைத் தமிழரின் புத்தாண்டு எது ?

அறிவார்ந்த ஆழமான ஆய்வுக்கட்டுரை. பெரும் உழைப்புடன் முனைப்பாகத் திரட்டிய செய்திகள் பாரட்டிற்குரியன. நெல் வடநாட்டிலிருந்தே தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்ற செய்தியை இப்போதே கேள்வியுறுகிறேன். சீனாவிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமானதாகவே இதுவரை அறிந்திருந்தேன். இன்னும் இதுபற்றி ஆய்வுசெய்ய தூண்டியுள்ளீர்கள்.

புத்தாண்டு என்ற முறையில் நம் மரபில் கொண்டாட்டாங்கள் இல்லை. அந்த concept நமக்கு இல்லை. இது சீன, ஐரோப்பிய மரபு என்றே கருதுகிறேன். தை, சித்திரை, ஆவணி மாதங்களின் தொடக்கத்தில் விழா எடுத்துள்ளனர் என்பது ஆண்டின் தொடக்கம் என்ற அடிப்படையில் அன்று. புத்தாண்டு, பொங்கல் ஆகிய சொற்களையே மிக அண்மைக்கால இலக்கியங்களில் தான் காண முடிகிறது, பொங்கல் என்ற சொல் முதலில் எந்த நூலில்/ கல்வெட்டில் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்,

உறுதியாக குழப்பமின்றி முடிவு சொல்வதாயின் தொல்காப்பிய மரபில் வரும் கார்காலமே ஆண்டின் தொடக்கம். ஆண்டு கார்காலத்தில் தான் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் காலந்தோறும் பண்பாட்டுப்படையெடுப்புகள் விழாக்களைப் புரட்டிப்போட்டுள்ளன. சோழ நாட்டுத் தலைநகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட இந்திரா விழாவின் தொடக்கம் சித்திரையின் தொடக்கமே என்ற செய்தியையும் நீங்கள் குறிப்பிடிருக்கலாம்.

புத்தாண்டு என்ற புதுத் தமிழ்த்தேசிய மரபை சமய, சாதி கடந்து நாம் உருவாக்கும்போது பெரும்பாலான தமிழறிஞர்களின், தமிழ் உணர்வாளர்களின் ஒட்டுமொத்த முடிவின்படி உலகத் தமிழ்ச்சமூகம் தை முதல் நாளையே புத்தாண்டாக ஏற்பதே சரியானதாகும். அதை நீண்ட நாள் முன்பே மலேசிய தமிழ்ச்சமூகம் ஏற்றுள்ளது. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.

  • w-facebook

CONNECT​ WITH US:​​

  • w-youtube

SUBSCRIBE:​​

1 Springleaf Rise,

Singapore 787981

CONTACT US:

For any queries, please contact

us here.

ADDRESS

Subscribe for Updates

© 2019 CSTC. All Rights Reserved.