top of page
red.png

உரைகள்

புத்தாண்டு -- பல புதையல்கள்

சிங்கப்பூர் பலவிதமான பண்பாடுகளையும் அவை சார்ந்த விழாக்களையும் கொண்டாடி மகிழும் சூழலைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு விழா ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் பின் உள்ள அடிப்படைத் தத்துவங்கள் என்ன?, சடங்குகளின் முக்கியத்துவம் என்ன? என்பதை முழுமையாக அறியாமல் உள்ளோம். கடந்த மார்ச் 31ம் தேதி,  சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், "புத்தாண்டு --பல புதையல்கள்" எனும் நிகழ்ச்சியை  நடத்தியது. இதில், தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி மற்ற பண்பாடுகளில் கொண்டாடப்படும் ஆங்கில, சீன, இஸ்லாமிய புத்தாண்டு பற்றியும் தேர்ந்த அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் ஆங்கிலப் பேச்சுகளைக் கீழுள்ள இணைப்புகளின்வழி படித்து மகிழுங்கள்.

பல கலாசாரங்களைப் பிரதிபலிக்க, ஆங்கில சூஜி கேக், சீன நியான் காவ், மலாய் அபோக் அபோக், நாகாசாரி ஜாகுங், தமிழ்ப் பாயசம் ஆகியவை சிற்றுண்டிகளாகப் ​பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்​டோர் இந்தப் பல பண்பாட்டு உணவுப் படையலை வெகுவாக ரசித்தனர். இந்நிகழ்வில் சுமார் சீன, மலாய், மற்றும் இந்திய இனங்களைச் சேர்ந்த 150 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

blue.png
red.png
ஆங்கிலப் புத்தாண்டு குறித்து
முனைவர் ஜெஃப்ரி பெஞ்சமின்

புத்தாண்டு என்பது கால சுழற்சியின் தொடக்கத்தை குறிப்பதாகும். சில பண்பாடுகள் கதிரவனை மையமாகக் கொள்ளும், சில நிலவினை மையமாகக் கொள்ளும் என்றும், கிருத்துவ அடிப்படையிலான ஆங்கில கால அட்டவணை இரண்டையும் இணைத்துக் கொள்கிறது என்றும், கிருஸ்துமஸ் சூரிய நாட்குறிப்பேட்டிலும், ஈஸ்டர் சந்திர நாட்குறிப்பேட்டிலும் அமையும் என்று விளக்கினார். இவ்விரண்டு நாட்குறிப்பேடுகளும் ஒன்றி வாராது; அதாவது சூரிய வருடத்தில் 365.25 நாட்களும், சந்திர மாதத்தில் 29.5 நாட்களும் இருப்பதால், ஒரு வருடத்தில் 12.38 சந்திர மாதங்கள் இருக்கும் என்பன போன்ற சுவையான  அறிவுசார் நெருடல்களை முன்வைத்தார்.

முஸ்லிம் புத்தாண்டு குறித்து  முனைவர் முகமது  இம்ரான் முகமது தாயீபு

இஸ்லாமிய மாதமான முகர்ரத்தின் முக்கியத்துவத்தையும், புத்தாண்டு பிறக்கும் அந்த மாதத்தை தீமைகளை விலக்கி, அமைதியையும், அன்பையும் போற்றும் மாதமாகக் கடைபிடிக்கும் வழக்கத்தைப் பற்றி விளக்கினார். மேலும் இஸ்லாமிய கால அட்டவனையில் ஒரு வருடத்திற்கு  354 அல்லது 355 நாட்களே இருப்பதினால், இஸ்லாமிய விழா நாட்களான நோன்புப் பெருநாளும், ஹஜ் திரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே வருமென்றும், காலத்தை கதிரவனைக் கொண்டு கணக்கிடிதலினும், நிலவைக் கொண்டு கணக்கிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதையும் புரிய வைத்தார்.

சீனப்புத்தாண்டு பற்றி

முனைவர் விவியன் வீ

blue.png
red.png

தமிழ்ப் புத்தாண்டு குறித்து முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்

பன்றி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி,  நாய் முதலிய ஆண்டுகளாக மட்டுமே நாம் அறிந்த சீன ஆண்டுகள் உலோகம், நீர், மரம், நெருப்பு மற்றும் நிலம், என்ற ஐம்பூதங்களின் கூட்டாக உலோக பன்றி ஆண்டு, உலோக எருது ஆண்டு என்று தொடங்கி, உலோக நாய் ஆண்டுடன் முடிந்து, நீர் பன்றி ஆண்டு என்று தொடரும். பன்னிரண்டு விலங்குக் குறியீடுகளும் ஒவ்வொரு சுழற்சியாக முடிந்து அடுத்த ஐம்பூதத்தின் சார்ந்த விலங்காண்டு வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கும் என்றும், இது காலம் முடிவடையாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்று சீன பண்பாடு நம்பும் தத்துவத்தை சார்ந்து அமையும் எனும் சுவாரசியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்ப் புத்தாண்டின் கூறுகளையும், அதன் பின் உள்ள வரலாற்று, அறிவியல், நில, பூகோள அளவிலான காரணங்களையும், அதைக் குறித்த ஆய்வுகளையும் படங்களின் துணையுடன் விரிவாக விளக்கினார். நட்சத்திர கணிப்புகளில் முதலாவதான மேஷம் நட்சத்திரத்தில் கதிரவன் தன் மறு சுழற்சியில் நுழையும் சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொள்வதாகத் தெளிவாக்கினார். இதற்கான மேற்கோள் பதினெங்கீழ்க்கணக்கு நூலான நெடு நல்வாடையில் இருக்கிறது என்பதையும், மேலும் திதி எனும் வார்த்தையில் இருந்து பிறந்ததுதான் தேதி; நிலவினை மையமாக வைத்துக் கணக்கிடப்படுபவை நாட்கள் என்பதையும், கதிரவனை மையமாக வைத்து அமைக்கப்பட்டவை மாதங்களும் வருடங்களும் என்பதையும் பார்வையாளர்கள் ஆர்வமெழ விவரித்தார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தொடக்க விழா
red.png

திரு அருண் மகிழ்நன், தலைவர்,

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இன்றைய தினம் -- 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ம் தேதி -- சிங்கப்பூருக்கு,  குறிப்பாகத் தமிழர்களுக்கு, வரலாற்றுச் சிறப்பு​மிக்க ஒரு நாள்...

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்க விழா
blue.png

திரு எஸ் ஈஸ்வரன், அமைச்சர், பிரதமர் அலுவலகம்

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள். மறக்கமுடியாத நாள்...

red.png

திரு அருண் மகிழ்நன்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

இது ஒரு பொன்னான நாள்.  பொன்விழாக் கொண்டாடும் தருணத்தில் நிகழும் பொன்னான நாள்...

red.png

திரு நா ஆண்டியப்பன், தலைவர்,
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இந்த மாபெரும் திட்டம் சிங்கப்பூருக்கு அதன் பொன்விழா ஆண்டில் தமிழ்ச் சிங்கப்பூர்ச் சமூகம் வழங்கும் மிகப் பெரிய அன்பளிப்பு...

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தின் அறிமுக விழா
red.png

திரு எஸ் ஈஸ்வரன், அமைச்சர், பிரதமர் அலுவலகம்

திரு அருண் மகிழ்நன்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

blue.png

உங்கள் அனைவரோடு சேர்ந்து தமிழ் மின் மரபுடைமைத் திட்டத் துவக்க விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்னும் இத்திட்டம் இழக்கப் போவதையும் இனி வரப்போவதையும் கட்டிக் காக்க உருவான திட்டம்...

blue.png

திரு நா ஆண்டியப்பன், தலைவர்,
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றான் மகாகவி பாரதி. இன்று அவன் கனவு நனவாகியிருக்கிறது...

red.png

திருமதி ஜெயந்தி சங்கர்,
எழுத்தாளர்

என்னுடைய அனுபவங்கள் வாயிலாக எனக்குக் கிடைத்த நம்பிக்கைகளைச் சொல்ல இருக்கிறேன். மின்னூல்கள் வாசிக்கும் Kindle போன்ற சாதனங்கள் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம்...

bottom of page